மலையாள 'ஆர்டிஎக்ஸ்' படத்திற்குக் குவியும் பாராட்டுக்கள்

நஹஸ் ஹிதயநாத் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 'ஆர்டிஎக்ஸ்'. இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் இப்படம் சுமார் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தைப் பார்த்து பல சினிமா பிரபலங்களும் பாராட்டி வருவதால் அது படத்திற்குக் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நேற்று இப்படத்தைப் பாராட்டி, “ஆர்டிஎக்ஸ்' மலையாளத் திரைப்படம்… ஜஸ்ட் வாவ்… இந்தியாவின் மிகச் சிறந்த மார்ஷியல் ஆர்ட்ஸ், ஆக்ஷன் திரைப்படம். இப்படத்தைத் தியேட்டருக்குச் சென்று பார்த்து ஆதரவு கொடுங்கள், வாழ்த்துகள் ஆர்டிஎக்ஸ் டீம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், “ஆர்டிஎக்ஸ்… ஒரு சரியான கமர்ஷியல் என்டர்டெயினர்.. மீண்டும் தியேட்டரில் இப்படத்தைப் பார்க்க விரும்புகிறேன். நஹஸ் ஹிதயத் உங்களது பார்வையை விரும்புகிறேன். ஆக்ஷன் நிறைந்த மாஸ், மற்றும் எமோஷன்கள்…

ராபர்ட், டானி, சேவியர்… நீங்கள் மூவரும் அதைச் சொந்தமாக்கி ஏற்றியுள்ளீர்கள்.. உங்களைப் பார்ப்பதில் கொண்டாட்டமாக உள்ளது. ஷேன் நிகாம்.. நீரஜ் மாதவ், ஆண்டனி வர்கீஸ்….மகிமா நம்பியார், நீங்கள் நிஜமாகவே அழகாக இருக்கிறீர்கள், நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகச் சிறந்த கதாபாத்திரம்… அன்பறிவு மாஸ்டர் பின்னிட்டீங்க… சாம் சிஎஸ் இசையும் தெறி… சோபியா பால், கெவின் உங்கள் சினிமாவை நீங்கள் நம்பியதற்கு வாழ்த்துகள்… மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்,” என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.