சமீபத்தில் JioBharat K1 Karbonn 4G விற்பனை குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அமேசான் தளம் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய தளங்களில் இந்த மொபைல் விற்பனையாகி வருகிறது. அதிக ஸ்டோரேஜ் வசதி மற்றும் கேமரா உள்ளிட்ட வசதிகளோடு விற்பனையாகி வரும் இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.
JioBharat K1 Karbonn 4G மொபைல்டெக் உலகில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜியோவின் அடிப்படை 4G மொபைலான JioBharat K1 Karbonn 4G மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு காம்பேக்ட் உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 999 ரூபாய் விலையில் வெளியாகி விற்பனை ஆகி வருகிறது. அதன் சிறப்பம்சங்களை காணலாம்.
JioBharat K1 Karbonn 4G டிஸ்பிளேJioBharat K1 Karbonn 4G மொபைலானது பட்டன் கீபேட் கொண்ட பேசிக் மாடல் மொபைலாகும். இதில் 1.77 இன்ச் ஸ்க்ரீன் பொறுத்தப்பட்டுள்ளது. 720p ஸ்க்ரீன் ரெசல்யூஸன் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஜியோ சிம்மை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டோரேஜ் , பேட்டரி மற்றும் பேண்ட் சப்போர்ட்இதில் 128GB வரை நீட்டிக்க கூடிய மெம்மரி வசதி வழங்கப்பட்டுள்ளது. 1000mAh பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இதில் 3, 5 மற்றும் 40 பேண்ட் சப்போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கேமரா மற்றும் இதர விவரங்கள்JioBharat K1 Karbonn 4G மொபைலில் 0.3 மெகாபிக்ஸல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் ஜியோ சினிமா, ஜியோ சாவன், ஜியோ பே (Jio Pay) ஆகியவை சப்போர்ட் ஆகும். இதன் மூலம் UPI வழியாக பணத்தை அனுப்பதல் மற்றும் பெறுதல் ஆகிய சேவைகளை பயன்படுத்த முடியும்.
ஜியோ போன் ரீச்சார்ஜ் திட்டங்கள்இந்த மொபைலில் ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கான ரீச்சார்ஜ் திட்டங்களையும் மாதாந்திர திட்டம் மற்றும் வருடாந்திர திட்டம் என இரண்டு ஆப்ஷன்களை வைத்துள்ளது. அதன்படி தினசரி 0.5GB டேட்டா அடிப்படையில் 28 நாட்களுக்கான ரீச்சார்ஜ் திட்டம் 123 ரூபாய்க்கும், 365 நாட்களுக்கான திட்டம் 1234 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.