தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர் மக்களுக்கு இன்றைய காலை சோகமான நாளாக விடிந்தது. நகரில் உள்ள ஒரு 5 அடுக்கு மாடிக் கட்டடத்தில் சுமார் 200 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு அடுக்குமாடி குடியிருப்பில் தீடிரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது. தீ பரவுவதை கண்ட மக்கள், வெளியே தப்பிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கட்டிடத்தின் உள்ளே இருந்த கேட் பூட்டப்பட்டிருந்ததால் மக்களால் வெளியேற முடியவில்லை.
இதனால் உள்ளே இருந்த மக்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறித் துடித்தனர். ஆனால் அவர்கள் மீதும் தீ பரவ சிறிது நேரத்தில் தீயின் கோர நாக்குகளில் இரையாகினர். தகவலறிந்து உடனடியாக விரைந்த அவசர மீட்புக் குழுவினர், கட்டடத்தில் பரவிய தீயை அணைத்து உள்ளே நுழைந்தனர். ஆனால், அவர்கள் உள்ளே செல்வதற்குள் பலரும் எரிந்து தீக்கிரையாகினர்.
பச்சோந்தி போல மாறுறீங்க – ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த கோர விபத்தில் 7 சிறுவர்கள் உள்பட 73 பேர் உயிரிழந்துவிட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு தளத்திலும் எரிந்த நிலையில் உடல்களை கண்டறிந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். கட்டடத்தில் இருந்து எரிந்த உடல்களை வெளியே கொண்டு வந்த மீட்புக் குழுவினர் சாலையில் கிடத்தி போர்வை மற்றும் ஷீட்களை கொண்டு மூடினர்.
விஷாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஹரி பட குழு..
இச்சம்பவத்தில் தீக்காயமடைந்த 52 பேரை மீட்புக் குழுவினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடும் புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சிலர் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், கட்டடத்தின் ஜன்னல்களில் இருந்து புகை தொடர்ந்து வந்த வண்ணம் இருந்துள்ளது.
இந்த கட்டடத்தில் வசித்த மக்கள் எந்தவித முறையான ஒப்பந்தங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியதாகவும், அதனால் அவர்களின் உடலை அடையாளம் காணுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் மீட்புக் குழு அதிகாரி தெரிவித்தார்.
நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?
அதிகாலை நடந்த இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென இதுவரை கண்டறியப்படவில்லை. ஜோகன்னஸ்பர்க் நகரக் குழு உறுப்பினரான மக்சினி டிஷ்வாகு, கட்டிடத்திற்கு உள்ளே வெளிச்சத்திற்காக பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூறினார். தீ எளிதில் பரவும் பொருட்களை அங்கிருந்த மக்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் இதன் காரணமாக தீ அதிவேகமாக பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா சந்தித்த மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.