iQoo Z7 Pro 5G இந்தியாவில் வெளியானது! 44W ஃபிளாஷ் சார்ஜிங், MediaTek ப்ராசஸர் மற்றும் அல்டிமேட் சிறப்பம்சங்கள்!

விவோவின் ப்ராண்டான iQoo தனது Z7 சீரிஸ் வரிசையில் தற்போது iQoo Z7 Pro 5G மாடலை வெளியிட்டுள்ளது. முந்தைய மாடல்களை விட ப்ராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை மாற்றி குறிப்பிடத்தகுந்த அப்கிரேடுகளுடன் வெளியாகியுள்ளது இந்த மொபைல். இந்த மொபைலில் வெளியாகி உள்ள புதிய சிறப்பம்சங்கள் என்ன என்ற முழு விவரங்களை பார்க்கலாம்.

​iQoo Z7 Pro 5G ப்ராசஸர் மற்றும் சார்ஜிங்iQoo Z7 Pro 5G மொபைலில் Mali-G610 MC4 GPU மற்றும் 8GB LPDDR4X ரேமுடன் கூடிய octa-core 4nm MediaTek Dimensity 7200 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 4,600mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 66W வேகமான சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 22 நிமிடத்தில் ஜீரோவில் தொடங்கி 50% வரை சார்ஜ் ஏறிவிடுமாம்.
​iQoo Z7 Pro 5G டிஸ்பிளேiQoo Z7 Pro 5G – ன் மாடலில் 6.78-இன்ச் full-HD+ (2400 x 1080 பிக்ஸல்ஸ்) AMOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 300Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.
​iQoo Z7 Pro 5G – ன் நிறம் மற்றும் ஸ்டோரேஜ்iQoo Z7 Pro 5G மொபைல் Graphite Matte மற்றும் Blue Lagoon ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் வசதியை பொறுத்தவரை 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி, 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகி உள்ளது.
​கேமராiQoo Z7 Pro 5G – ல் பின்பக்கம் 64 மெகாபிக்ஸல் சாம்சங் GW3 பிரைமரி ரியர் சென்சார் மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா ரிங் – லெட் ஃபிளாஷ் வசதியோடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்பக்கம் 16MP செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
​iQoo Z7 Pro 5G – ன் விலைiQoo Z7 Pro 5G இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகி உள்ளது. இதன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ 23,999 என்ற விலைக்கும், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ 24,999 விலைக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. செப்டம்பர் 5 முதல் மொபைல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில் ரூபாய் 2000 வரை வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.