அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் விஜய்யின் ‘லியோ’ பட வில்லன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ரசிகர்கள் அப்செட்அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட் வெளியாகும் போதெல்லாம் எப்படியாவது சீக்கிரம் படம் துவங்கிவிடும் என்று ரசிகர்களும் தொடர்ச்சியாக எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் படம் இன்னமும் துவங்கிய பாடாக இல்லை. இதனால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். படத்தின் டைட்டிலோடு எந்த அப்டேட்டையும் விடாமல் படக்குழு கப்சிப் என உள்ளது.
ஏகே 62 அறிவிப்பு’துணிவு’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே ‘ஏகே 62’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப்படம் துவங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ‘ஏகே 62’ படத்திலிருந்து விக்கி விலகினார். அவரின் கதை தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காத காரணத்தால் அவர் இந்தப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
விடாமுயற்சி அப்டேட்இதனையடுத்து தான் மகிழ் திருமேனி இந்த படத்திற்குள் நுழைந்தார். கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் ‘விடாமுயற்சி’ என்ற டைட்டிலையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இதனால் படப்பிடிப்பு விரைவில் துவங்கிவிடும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் டைட்டில் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் ‘விடாமுயற்சி’ படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.
ட்ராப்பான விடாமுயற்சிஇந்நிலையில் இந்தப்படம் கைவிடப்பட்டு விட்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், விரைவில் ‘விடாமுயற்சி’ படம் துவங்கும் என தெரிவித்தார். இதனால் ஏகே ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
லியோ வில்லன்இந்நிலையில் லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ள சஞ்சய் தத், அடுத்ததாக அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனாலும் ‘விடாமுயற்சி’ படம் துவங்கும் வரை நாங்கள் எந்த தகவலையும் நம்ப மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர் ஏகே ரசிகர்கள்.