விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு – பயணிகளுக்கு செம குட் நியூஸ்!

பண்டிகை காலங்கள், பள்ளி தொடர் விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை ஆகிய நேரங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று திரும்புவர். கல்விக்காகவும், வேலைக்காகவும், தொழிலுக்காகவும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வந்து குடியேறியவர்கள் இது போன்ற நாள்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

எனவே அந்த நேரத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளின் தேவையை அறிந்து அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்களை இயக்கும்.

தற்போது வார இறுதிநாள்களுக்கே மக்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மூன்று நாள்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை என்றால் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்தி மக்களை சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர்.

எனவே தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் தற்போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

காஞ்சிபுரத்தில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை விடாது தொடர்ந்த கனமழை

அந்த வகையில் நாளை சென்னையிலிருந்து திருச்சி, சேலம், கோவை, நெல்லை, பெங்களூர் போன்ற பிற இடங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, பெங்களுர் போன்ற ஊர்களிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளிலிருந்து கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதாவது நாளைய தினம் மட்டும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஞாயிற்றுக் கிழமையும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.