பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாததாலேயே முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பங்குச் சந்தையில் பல ஆண்டுகள் முதலீடு செய்பவர்களே நஷ்டத்துக்கு ஆளாகும் சூழலும் இருக்கிறதே, நம்மால் மட்டும் லாபம் பார்த்துவிட முடியுமா என்ற அச்சமும் இருக்கிறது.
ஏனெனில் பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க்கானது. பெரும்பாலும் பணம் சார்ந்த விஷயத்தில் மக்கள் உணர்வுப்பூர்வமாகவே முடிவெடுப்பதால் எப்போது சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் எப்போது சந்தையில் முதலீட்டை வெளியே எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால் மிக எளிமையான வழியில் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல் பங்குச் சந்தையில் அனுபவமிக்க, நிபுணர்கள் மேலாண்மையில் முதலீடுகளை மேற்கொள்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட். மியுச்சுவல் ஃபண்ட் பங்குச் சந்தையின் பலனை நமக்குத் தரக்கூடியதாக இருக்கும். அதேசமயம் லாப, நஷ்டத்தை சமநிலைப்படுத்தி நல்ல வருமானத்தையும் ஈட்டித் தரும். மியூச்சுவல் ஃபண்டுகள் நம்முடைய ஒவ்வொரு தேவைக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் நம்முடைய வருமான ஆதாரத்துக்கு ஏற்பவும், நம்முடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்பவும், வயதுக்கு ஏற்பவும், நம்முடைய நிதி இலக்குக்கு ஏற்பவும் சரியான ஃபண்டுகளைத் தேர்வு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமால் குறைந்தபட்சம் ரூ.500 கூட முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்டுகளில் எந்த ஃபண்டு நமக்குச் சரியானது என்பதை எப்படி தேர்வு செய்வது, மியுச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை நிர்வகிப்பது எப்படி, நம்முடைய நிதி இலக்குகளை எப்படி திட்டமிட்டு அடைவது என்பது குறித்தெல்லாம் விரிவாக பயிற்சி அளித்துவருகிறது நாணயம் விகடன். இந்த முறை கோவையில் முதலீட்டாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி கோயம்பத்தூரில் செப்டம்பர் 9-ம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. காந்திபுரம் ஹோட்டல் விஜய் பார்க்கில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ். குருராஜ், கே.சுவாமிநாதன் ஆகியோர் பேசுகிறார்கள்.
நாணயம் விகடன் நடத்தும் இந்த முதலீட்டாளர்கள் பயிற்சிக்கு முற்றிலும் அனுமதி இலவசம். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.