சாம்ராஜ் நகர்:கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில், பண்டிப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது, நாட்டிலேயே புலிகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. யானைகள் எண்ணிக்கையில் நாட்டில் முதல் இடம் பிடித்துள்ளது.
இதன் இயக்குனராக, புதுச்சேரியை சேர்ந்த தமிழ் அதிகாரி ரமேஷ்குமார், 2022ல் பொறுப்பேற்றார். இவரது கடும் உழைப்பு, திட்டமிட்டு செயல்படுதல் காரணமாக, இம்முறையும் புலிகள், யானைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
செயலற்று கிடந்த வன விடுதிகளுக்கு புத்துயிர் வழங்கி, சீரமைத்தார். வனம், வன விலங்குகள் குறித்து, மலைவாழ் மக்கள் மற்றும் மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினார்.
இந்தாண்டு மார்ச்சில், நாட்டின் 50வது புலிகள் ஆண்டை கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு வந்து சபாரி சென்றார். இவருக்கு வனத்தை சுற்றி காண்பித்தவர் ரமேஷ்குமார்.
இந்நிலையில், மைசூரு மண்டல செயல் திட்ட காப்பாளராக ரமேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின் புதிய இயக்குனராக பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். 2011ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரி. இமயமலை ஏறி சாதனை படைத்த முதல் ஐ.எப்.எஸ்., அதிகாரி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement