Google AI Search ஆப்ஷன் இந்தியாவிலும் அறிமுகம்! இனி தேடுறதுக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்லும் கூகுள்!

டிஜிட்டல் உலகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு(AI) மிக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. சாதனங்கள் தொடங்கி தொழிற்நிறுவனங்கள் வரை அனைத்திலும் AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் முன்னணி தேடுதளமான
கூகுள்
இந்தியாவில் முதன்முறையாக AI உதவியுடன் Search செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google AI தேடல் வசதி

கூகுளை பயன்படுத்தி சேவைகளை தேடும் பயனர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தவும், சரியான மற்றும் துல்லியமான சேவை அவர்களுக்கு கிடைக்கவும் கடந்த டிசம்பர் மாதம் கூகுள் இந்த ஜெனெரேட்டிவ் AI வசதியை முதன்முதலில் அமெரிக்காவில் டெமோவாக அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுக்கு வெளியில் முதன் முறையாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இதே சேவையை சோதனை முறையில் செயல்படுத்தும் முடிவை எடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் Search Labs

தற்போதைய நிலையில் கூகுள் (Chrome) டெஸ்க்டாப் வசதியின் வழியாக மட்டும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் இதர டிவைஸ்களில் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான செயல்பாடுகளை கூகுள் முன்னெடுத்து வருகிறது. கூகுளின் Search Labs மூலம் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

துல்லியமான தேடுதல் அனுபவம்

இந்த சேவை மூலம் நார்மல் தேடுதல் மூலம் தேடினால் கிடைக்காத தகவல்கள் கூட, இந்த ஜெனரேட்டிவ் AI மூலம் தேடினால் துல்லியமான விடைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக, நீங்கள் ஒரு இடம் குறித்து தேடுகிறீர்கள் என்றால் அது குறித்து தகவல் மட்டுமின்றி அங்கு போய் என்ன செய்யலாம் என்பது வரை தகவல்களை வழங்கும்.

கூகுள் ஜெனரேட்டிவ் AI – ஐ பயன்படுத்துவது எப்படி?
கூகுள் தேடுதளத்திற்கு சென்று Search Labs என்று லிங்கை பயன்படுத்தி உள்ளே செல்லவும். அதில் காணப்படும் SGE ஆப்ஷனை ஆன் செய்து கொள்ளவும். பின்னர், நீங்கள் கூகுளை பயன்படுத்தி தேடும் போது உங்களுக்கு AI அசிஸ்டன்ஸ் உதவி கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.