சிங்கப்பூர் அதிபராக தற்போது பதவி வகித்து வருபவர் ஹலிமா யாகூப். இவருடைய பதவி காலம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து 2.7 மில்லியன் வாக்காளர்கள் உள்ள சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் அந்நாட்டின் கேபினட் அமைச்சரான இந்திய வம்சாவளி, தமிழரான தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் பதவியிலும் இருக்கக்கூடாது என்பதால் தனது அமைச்சர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார்.
நிலவில் அதிர்வு… விக்ரம் லேண்டரின் இல்ஸா கருவி பதிவு செய்த சம்பவம்… தீவிர ஆய்வில் இஸ்ரோ!
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்னமுடன் சீன வம்சாவளியை சேர்ந்த இங் காக் சோங், மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலுக்கான கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் மூன்று போட்டியாளர்களுமே தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழில் வாக்கு சேகரித்தனர்.
தர்மன் சண்முகரத்னம் தனது சின்னமான அன்னாசி பழத்தை காண்பித்து மக்கள் மத்தியில் ஓட்டு கேட்டார். மூன்று பேருமே தங்களின் கொள்கைகளையும் திட்டங்களையும் கூறி வாக்கு சேகரித்து வந்தனர். இந்நிலையில் சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை… சென்னைக்கும் இருக்காம்… தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னமுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. தர்மன் சண்முகரத்னம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ளார். கல்வி, நிதி, தொழில் என பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.
வருகிற டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்?
சிங்கப்பூரின் ஆளும் கட்சியான ஆளும் மக்கள் செயல் கட்சியும் தர்மன் சண்முக ரத்தினத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழர்கள் மத்தியிரும் தர்மனுக்கு ஆதரவு உள்ளதால் அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.