புதுடெல்லி,
‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூலை 28-ந்தேதி) நடைபயணம் தொடங்கினார்.
தமிழகத்தின் தென் பகுதியில் என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், நடைபயணத்தை அண்ணாமலை முதற்கட்டமாக முடித்துள்ளார். இதற்காக அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பினர் வாழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடைபயணத்தை முதற்கட்டமாக முடித்துள்ள அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
என் மண், என் மக்கள் நடைபயண முதற்கட்டத்தை முடித்துள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவித்து சட்டம், ஒழுங்கை சீர் செய்யும். இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 2-வது கட்ட நடைபயணத்தை அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் இருந்து வருகிற செப்டம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறார்.