இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்யவுள்ளது. இதற்காக வரும் செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
செப்டம்பர் 2 ஆம் தேதியான சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்து விண்கலம் விண்ணில் பறக்க தயாராக உள்ளது.
திருப்பதியில் அடுத்த மாதம் இது கிடையாது… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் நாளை முதல் தொடங்குவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவித்தார்.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் சோம்நாத் கூறினார். நாளை கவுண்டவுன் தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்தார். சந்திரயான் 3 நன்றாக வேலை செய்கிறது என்றும் திட்டமிட்டப்படி அனைத்து தரவுகளும் நன்றாக வருவதாகவும் சோம்நாத் தெரிவித்தார்.
நிலவில் அதிர்வு… விக்ரம் லேண்டரின் இல்ஸா கருவி பதிவு செய்த சம்பவம்… தீவிர ஆய்வில் இஸ்ரோ!
மேலும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய 14 ஆம் நாளில் சந்திரயான் 3 திட்டம் நிறைவடையும் என்றும் சோம்நாத் தெரிவித்தார். ஆதித்யா எல்1 விண்கலம் நான்கு மாதங்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோ மிட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை அடையும். அதன்பிறகு தொடர்ந்து சூரியன் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்1 மிஷன் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.