மதுரை மதுரை உயர்நீதிமன்றம் கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் சென்னை மீனவர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், ”நமது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் […]