சென்னை: தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பொது மக்களின் பாதுகாப்பை […]