Thalapathy 68 : பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மற்றும் சிம்ரனுக்கு இடையே போட்டி ஆரம்பமாகிறது !

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் குறித்து பல கேள்விகள், இயக்குனர் வெங்கட் பிரபுவை நோக்கி வரும், இருப்பினும், லியோ படம் வெளியாகும்வரை எதையும் சொல்லமாட்டேன் என இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

தளபதி 68

எனினும், அவ்வப்போது, தளபதி 68 குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் டூயல் ரோலில் நடிக்கவிருக்கிறார். பிகில் படத்தில் வந்தது போலவே, தந்தை மகன் கதாபாத்திரத்தில் டபுள் ரோலில் விஜய் நடிக்கப்போகிறார். டபுள் ரோல் என்பதால் இரண்டு ஹீரோயின்கள் தேவைப்படும் என, தந்தை ரோலுக்கு ஒரு ஹீரோயின் மகன் ரோலுக்கு ஒரு ஹீரோயின் என முடிவு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

தளபதி விஜய் தான் காரணம் !! போட்டிபோடும் இயக்குனர்கள் ..

வின்டேஜ் விஜய்க்கு சரியான ஜோடி என்றால், ஜோதிகா தான் என பலரும் சொல்லுவார்கள். குஷி, திருமலை போன்ற படங்களில் விஜய் மற்றும் ஜோதிகா ஜோடியாக நடித்திருப்பார்கள். இந்த காம்போவை மீண்டும் ஒன்றாக பார்த்தால் நன்றாக இருக்குமென, தந்தை கதாபாத்திர விஜய்க்கு ஜோதிகாவை ஜோடியாக வைக்கலாம் என நினைத்தாராம் இயக்குனர். இது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது. ரசிகர்களும், பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஜோதிகா ஜோடியை ஒன்றாக பார்க்க ஆர்வமாக இருந்தனர்.

எவெர்க்ரீன் கம்போ விஜய் மற்றும் ஜோதிகா

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகன் கதாபாத்திர விஜய்க்கு ஜோடியாக, டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்த பிரியங்கா மோகன் நடிப்பார் என்னும் தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அந்த தகவல் உண்மைதான் எனவும் இயக்குனர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தினார். இந்நிலையில், 90ஸ் மற்றும் 2000ங்களில் ஜோதிகாவிற்கு போட்டியாக இருந்த சிம்ரன் தளபதி 68 படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவெர்க்ரீன் கம்போ விஜய் மற்றும் சிம்ரன்

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

தந்தை கதாபாத்திர விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜோதிவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஜோதிகாவை வைத்த அந்த இடத்தில் வேறு யார் இருந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் என யோசித்த இயக்குனர் வெங்கட் பிரபு சிம்ரனை அணுகியுள்ளாராம்.

90ஸ் மற்றும் 2000ங்களில் இளைஞர்களின் கனவு கன்னிகள் !

ஏற்கனவே, வாரணம் ஆயிரம், ராக்கெட்ரி போன்ற படங்களில் அப்பா கதாபாத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சிம்ரன். அதுமட்டுமல்லாமல், துள்ளாத மனமும் துள்ளும், யூத், ப்ரியமானவளே, உதயா போன்ற படங்களில் தளபதி விஜயுடன் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். ஜோதிகா வேண்டாம் என சொல்லிய இந்த வாய்ப்பை சிம்ரனிடம் அணுகியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.