விவோவின் துணை பிராண்டான iQoo தனது iQoo Z7 Pro 5G மொபைலை ஆகஸ்ட் 31ம் தேதி இந்தியாவில் வெளியானது. அதே நேரத்தில் இதன் அடுத்த மாடலான iQoo Z8 மற்றும் iQoo Z8x மொபைலை சீனாவில் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள புதிய சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை பார்க்கலாம்.
iQoo Z8 மற்றும் iQoo Z8x ப்ராசஸர்iQoo Z8 மொபைலில் Octa-core MediaTek Dimensity 8200 ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. இதே iQoo Z8x மொபைலில் Snapdragon 6 Gen 1 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது.
iQoo Z8 மற்றும் iQoo Z8x டிஸ்பிளேiQoo Z8 மாடலில் 6.64-இன்ச் Full HD+ (2388×1080 பிக்ஸல்ஸ்) LCD டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி வழங்கப்பட்டுள்ளது. iQoo Z8x மொபைலிலும் இதே டிஸ்பிளே அமைவுகளே வழங்கப்பட்டுள்ளது.
iQoo Z8 மற்றும் iQoo Z8x பேட்டரிiQoo Z8 மொபைலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 120W அல்ட்ரா – ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியும், iQoo Z8x மொபைலில் 6000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 44W ஃபிளாஷ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
iQoo Z8 மற்றும் iQoo Z8x கேமராiQoo Z8 மற்றும் iQoo Z8x – ல் OIS வசதியோடு கூடிய 64 மெகாபிக்ஸல் பிரைமரி ரியர் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் கேமரா ரிங் – லெட் ஃபிளாஷ் வசதியோடு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16MP செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதே, iQoo Z8x மொபைலில் 50 மெகாபிக்ஸல் ரியர் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் கேமரா, ரிங் – லெட் ஃபிளாஷ் வசதியோடு வழங்கப்பட்டுள்ளது. 8MP செல்ஃபீ கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது.
iQoo Z8 மற்றும் iQoo Z8x – ன் ஸ்டோரேஜ்iQoo Z8 மொபைல் 8GB+256GB, 12GB+256GB, 12GB+512GB ஆகிய மூன்று ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு ரேம் வேரியண்ட்டுகளில் வெளியாகி உள்ளது. iQoo Z8x மொபைல் 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB ஆகிய இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
iQoo Z8 மற்றும் iQoo Z8x – ன் நிறம்iQoo Z8 மொபைல் Hoshino Ao, Moon porcelain white, Yao Ye Hei ஆகிய மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. iQoo Z8x மாடல் Moon porcelain white, Hoshino Ao, Yao Ye Hei ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
iQoo Z8 – ன் விலை8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ 19639 என்ற விலைக்கும், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ 20795 விலைக்கும் , 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ 23107 விலைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iQoo Z8x – ன் விலை8GB+ 128GB வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ 15015 என்ற விலைக்கும், 8GB+256GB வேரியண்ட் ரூ 16171 விலைக்கும் , 12GB+256GB வேரியண்ட் ரூ 17327 விலைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.