மக்களவை தேர்தல் 2024: பாஜகவை வீழ்த்த ’டார்கெட் 400’… இந்தியா கூட்டணி போட்ட பலே பிளான்!

2024 மக்களவை தேர்தலில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என இருபெரும் கூட்டணிகள் களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக, ஹாட்ரிக் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொண்டிருக்கிறது. இதை வீழ்த்த மும்பையில் இன்று 3வது முறையாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா கூட்டணி ஆலோசனை

இதில் 28 அரசியல் கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு, கூட்டணியின் லோகோ உள்ளிட்டவை அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளன. இந்நிலையில் இந்தியா கூட்டணி வகுக்கும் வியூகம் குறித்து சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாஜக உடன் நேரடி போட்டி

அதாவது, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 400 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கெல்லாம் நேரடி போட்டிக்கு இந்தியா கூட்டணி தயாராகி வருகிறது. ஆனால் மேற்சொன்ன தொகுதிகளில் யார், யார்? எங்கெல்லாம் போட்டியிடுவது? என்பது சிக்கலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி இந்தியா கூட்டணி கட்சிகள் கூறுகையில், தற்போதைக்கு பாஜகவை நேரடியாக எதிர்க்கவுள்ள தொகுதிகள் மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளன.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொகுதி பங்கீடு

400 தொகுதிகளில் வெற்றி பெறுவது எங்களுக்கு ஒன்றும் சிரமமான விஷயம் அல்ல. இவற்றில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வலுவான போட்டியாக இருப்போம். இந்த தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் எப்படி போட்டியிடுவது என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது என்று கூறினர்.

மாநில குழுக்கள்

தற்போதைக்கு எங்களின் கவனம் என்பது ஒருங்கிணைப்பு குழு அமைப்பது, ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வதும், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவது தான். அடுத்தகட்டமாக மாநில குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்கள் தான் மாநில வாரியாக, தொகுதி வாரியாக எந்த கட்சிகள் போட்டியிடுவது என முடிவு செய்யும் என்றனர்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் வேட்பாளர்

மேலும் நாட்டு மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்கு அடிமட்ட அளவில் இருந்து இந்தியா கூட்டம் முக்கியத்துவம் அளிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர் தான் இருக்கிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் தகுதி வாய்ந்த நபர்கள் பலர் இருக்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டின் முகத்தை தான் இந்தியா கூட்டணியின் பிரதமராக முன்னிறுத்துவோம். நேரம் வரும் போது அறிவிப்புகள் வரும் என்று விளக்கம் கொடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.