'ஜெயிலர்' வசூல் குவிப்பு: ரஜினிக்கு பி.எம்.டபுள்யூ கார், போனஸ் பரிசு
ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளிவந்தது. அதில் தமன்னா, சுனில், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நெல்சன் இயக்கி இருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலுடன் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 600 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி படத்தின் தயாரிப்பாளர் ரஜினியை நேற்று அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து மலர்கொத்து கொடுத்து நன்றி கூறினார். அதோடு அதிக வசூலுக்கு போனசாக காசோலையும் வழங்கினார். மேலும், ரஜினிக்கு விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ கார் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. காசோலை தொகை எவ்வளவு என்பதை தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. “வெற்றியை கொண்டாடுகிறோம்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரஜினி உற்சாகமடைந்துள்ளார்.