சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சண்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு நெட்டிசனின் அநாகரிகமான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடத்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப்படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் தான் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தை தொடர்ந்து றெக்க, வருத்தப்படாத வாலிபர் சங்கர், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ஷாலு ஷம்மு, தனது கிளமாரான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக தனது ஒர்க் அவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
சினிமா, சோஷியல் மீடியாக்களுக்கு மத்தியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றையும் நடத்து வருகிறார். ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மருத்துவமனையாக இது செயல்பட்டு வருகிறது.
Shalu Shammu: சொகுசு கார் வாங்கியுள்ள ஷாலு ஷம்மு.. விலையை மட்டும் கேட்டா அசந்துடுவீங்க.!
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னிடம் அநாகரிகமாக கேள்வி கேட்ட நெட்டிசன் ஒருத்தருக்கு ஷாலு ஷம்மு பதிலடி கொடுத்துள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அடிக்கடி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடும் ஷாலு ஷம்முவிடம் சமீபத்தில் நெட்டிசன் ஒருவர், உங்கள் மார்பு சைஸ் என்ன? என படு கேவலாக கேள்வி கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டு அசராத ஷாலு ஷம்மு, ‘உன்னுடையதை விட பெரியது தான்’ என பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பதில் சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நடிகைகள் உரையாடும் போது இந்த மாதிரி சிலர் ஏடாகூடமான கேள்வி கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பெரும்பாலமான நடிகைகள் இம்மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடுவார்கள். ஒரு சிலர் அதற்கு ரியாக்ட் செய்வதும் வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகை ஷாலு ஷம்மு நெட்டிசனின் அநாகரிகமான கேள்விக்கு தைரியமாக பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
‘ஜெயிலர்’ படத்தின் வரலாற்று வெற்றி.. ரெக்கார்ட் மேக்கர் ரஜினிக்கு கிடைத்த சிறப்பு பரிசு.!