வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உ.பி.,யில் மத்திய அமைச்சர் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30 வயது இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுசால் கிஷோர், இவரது வீடு லக்னோ அருகே பிகாரியா என்ற கிராமத்தில் உள்ளது.இவரது வீட்டில் இன்று 30 வயது இளைஞர் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்த இளைஞர் பெயர் வினாய் ஸ்ரீவஸ்தவா என்பதும், இவர் மத்திய அமைச்சர் கவுசால் கிஷோரின் மகன் விகாஷ் கிஷோரின் நண்பர் என்பதும் தெரியவந்தது.
துப்பாக்கியால் சூடு நடந்ததில் அவர் பிணமாக கிடந்துள்ளதும், அந்த துப்பாக்கி மத்திய அமைச்சரின் மகனுக்கு சொந்தமானதும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் அங்கிருந்தாரா என்பதும் குறித்தும், வேறு நபர்கள் யாரேனும் வந்து சென்றனரா என்பதும் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement