டில்லி புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களில் 93% திரும்ப பெறப்ப்ட்டுள்ளதாக ரிசர் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் […]