ரஷ்மிகா மந்தனாவை அடுத்து சமந்தாவும் தன் மேனேஜரை நம்பி பணத்தை பறிகொடுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
சமந்தாதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தாவிடம் ஒருவர் பல காலமாக மேனேஜராக வேலை செய்து வருகிறார். சமந்தாவின் கெரியர் சூப்பராக இருக்க அந்த மேனேஜர் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தன்னுடனே பல ஆண்டுகளாக இருப்பதால் மேனேஜரை கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறார் சமந்தா. இந்நிலையில் அந்த நம்பிக்கையை பயன்படுத்தி சமந்தாவை ஏமாற்றிவிட்டாராம் அவர்.தனி ஒருவன் 2தனி ஒருவன் 2 வில்லன் இவரா?ரூ. 1 கோடிசமந்தாவிடம் இருந்து ரூ. 1 கோடியை திருடிவிட்டார் மேனேஜர் என தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தான் மலை போல் நம்பிய மேனேஜர் இப்படி செய்தது குறித்து அறிந்த சமந்தா அதிர்ச்சி அடைந்தாராம். ஏன் இப்படி செய்தீர்கள் என மேனேஜரிடம் கேட்டாராம். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அறிவுரைமேனேஜரை இந்த அளவுக்கு நம்ப வேண்டாம் சமந்தா. நீங்கள் இப்படி நம்பும்படி அவர் எதையும் செய்யவில்லை. அவரை மாற்றிவிடுங்கள் என சில தயாரிப்பாளர்கள் சமந்தாவுக்கு அறிவுரை வழங்கினார்களாம். ஆனால் என் மேனேஜர் என்னை நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என நம்பி அவரை மாற்றாமல் இருந்திருக்கிறார் சமந்தா.
ரஷ்மிகாமுன்னதாக ரஷ்மிகா மந்தனாவிடம் இருந்து அவரின் மேனேஜர் ரூ. 80 லட்சம் திருடிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றார் ரஷ்மிகா. எங்களுக்கு இடையே எந்த நெகட்டிவிட்டியும் இல்லை. நாங்கள் சுமூகமாக பிரிகிறோம். நானும், அவரும் பிரிவது குறித்த வதந்திகளில் உண்மை இல்லை. நாங்கள் ப்ரொஃபஷனல்கள் என்று அறிக்கை வெளியிட்டார் ரஷ்மிகா.
மயோசிடிஸ்மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் சமந்தா. மேல் சிகிச்சை பெறவும், ஓய்வு எடுக்கவும் படங்களில் நடிப்பதில் இருந்து ஆறு மாத காலம் பிரேக் எடுத்திருக்கிறார். சிகிச்சை பெறுவதற்காக தன் அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார் சமந்தா. அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்த நேரத்தில் மேனேஜர் விஷயம் அறிந்த ரசிகர்களோ, அந்த ஆளுக்கு மனசாட்சியே இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Samantha:மேடையில் சமந்தாவை அலேக்கா தூக்கி ரொமான்ஸ் செய்த விஜய்: ப்ப்பா செம்ம கெமிஸ்ட்ரி
குஷிகெரியரை பொறுத்தவரை சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து சமந்தா நடித்த குஷி படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. சமந்தாவும், விஜய்யும் கணவன், மனைவியாக நடித்திருக்கும் குஷி படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குஷி பற்றி பாசிட்டிவாக பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.
கமலின் முதல் சம்பளம் தான் விஜய், சமந்தாவின் முதல் சம்பளமும்: எவ்வளவுனு தெரியுமா?
விஜய் தேவரகொண்டாஉன்னை மிஸ் பண்றேன்: நள்ளிரவில் சமந்தாவுக்கு வீடியோ கால் செய்த ‘குஷி’ விஜய் தேவரகொண்டாமுன்னதாக நள்ளிரவில் சமந்தாவுக்கு வீடியோ கால் செய்து பேசினார் விஜய் தேவரகொண்டா. என்ன இந்த நேரத்தில் வீடியோ கால் என்று சமந்தா கேட்டதற்கு, உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்றார். மேலும் நாக் நாக் ஜோக் சொல்கிறேன் என்று குஷி படத்தில் வரும் ஒரு பாடலை பாடினார் விஜய் தேவரகொண்டா. குஷி படத்திற்கு விளம்பரம் தேடவே விஜய் வீடியோ கால் செய்தார் என்று பேசப்பட்டது.