சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். நேற்று காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத் தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு முனைவர்.எம்.சுதாகர், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி […]