டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களுடன் பல ஓடிடி சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இதன் மூலம் தங்கள் நெட்வொர்க்கை இந்தியாவில் முதன்மைப்படுத்துவதற்கான போட்டியில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தன் பங்குக்கு இந்த போட்டியில் இணைந்துள்ளது.
யாருமே எதிர்பாராத வகையில் பிஎஸ்என்எல் கூட விலை உயர்ந்த ஓடிடி சலுகை கொண்ட ரீசார்ஜ் திட்டத்தையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் முழு விவரங்கள் மற்றும் பலன்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் 4799 ப்ராட்பேண்ட் ப்ளான்
இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் தனது பைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. அந்த சேவையில் ஒரு திட்டமாக 4799 ரூபாய் பிராட்பேண்ட் பிளான் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சேவை உங்கள் பகுதியில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் பிஎஸ்என்எல் இணையதளத்திற்கு சென்று அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள bsnl அலுவலகத்திற்கு சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
திட்ட சலுகைகள்
இந்த 4799 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். என்னதான் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது இது அவ்வளவு சிறந்த திட்டமாக தெரியவில்லை என்றாலும் தொடர்ந்து பிஎஸ்என்எல் பயன்படுத்தி வரும் நபர்களுக்கு இது ஒரு அரிய திட்டம் தான்.
அன்லிமிட்டெட் டேட்டா
அதேபோல இந்த திட்டத்தில் மாதம் 6.5TB டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் எவ்வளவு டேட்டா பயன்படுத்த வேண்டும் என்பதில் கவலையே பட வேண்டாம். உங்கள் வீட்டில் பலரும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் Disney+ Hotstar, Lionsgate, ShemarooMe, Hungama, SonyLIV, ZEE5, YuppTV உள்ளிட்ட ஓடிடி தளங்களையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதோடு சேர்த்து காலிங் கனெக்ஷனும் வழங்கப்படும்.
இதர நிறுவனங்களின் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்தவரை இது விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டம் ஆகும். ஏர்டெல் நிறுவனத்தில் 499 ரூபாயில் இருந்து தொடங்கி OTT சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இதே போல் ஜியோவிலும் OTT சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் 499 ரூபாயில் இருந்து துவங்குகிறது.