“லூனா 25” விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா புகைப்படம் வெளியீடு| Luna 25s Impact Site, Captured By NASA Lunar Reconnaissance Orbiter. See Before And After PICS

வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில், தென் துருவ பகுதியில் பள்ளம் உண்டாகிய படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய ரஷ்யா லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது.

புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலம், தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19ம் தேதி நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.

இந்த புகைப்படங்களை நாசா சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளது.

இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளது. குறிப்பிட்ட பகுதியை 2020ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் தெரியவந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.