மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது ரயில் ஏறியதில் உடல் சிதைந்து போனது. அவரிடம் இரண்டு செல்போன் இருந்தது. அந்த போனை ஆய்வு செய்ததில் அவர் முன்னாள் சிவசேனா கவுன்சிலர் சுதிர் மோரே(62) என்று தெரிய வந்தது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் ரத்னகிரி மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு தலைவராக இருந்த சுதிர் மோரேயின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து சுதிர் மோரேயின் மைத்துனி கூறுகையில், “இரவில் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தாமதமாகத்தான் வந்தார்.
நாங்கள் அனைவரும் படுக்கச் சென்றுவிட்டோம். எப்போது வெளியில் எழுந்து சென்றார் என்று எங்களுக்கு தெரியாது” என்றார். விக்ரோலி பார்க்சைட் பகுதியில் வசித்து வந்த சுதிர் மோரே தனது வீட்டில் இருந்து ஆட்டோ ஒன்றில் காட்கோபர் ரயில் நிலையத்திற்கு சென்றார். அவர் ரயில் நிலையத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டே செல்வது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இரவு 11.10 மணிக்கு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “சுதிர் மோரேயின் மகன் சமீர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண்ணுடன் சுதிர் மோரேயிக்கு 8 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. சுதிர் மோரே கடைசியாக யாருடன் பேசினார் என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த மிரட்டல் காரணமாகவே தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடன் எனது தந்தைக்கு தொடர்பு இருந்தது கடந்த ஜூன் மாதம் தான் தனக்கு தெரியும் என்றும் அவரது மகன் சமீர் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் பெயர் நீலிமா சவான் என்று தெரிய வந்துள்ளது. அடிக்கடி அவர் போனில் மிரட்டிக்கொண்டே இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY