சென்னை: மத்தியஅரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயமாக்கட்ப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். […]