சினிமாவில் 18 ஆண்டுகள் : தமன்னா நெகிழ்ச்சி பதிவு

நடிகை தமன்னா 2006ம் ஆண்டில் கேடி என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டில் தனது தாய் மொழியான ஹிந்தியில் அவர் அறிமுகமாகிவிட்டார். தனது முதல் காதலான சினிமாவில் நடிக்க வந்து 18 ஆண்டுகளை தான் நிறைவு செய்திருப்பதாக ஒரு பதிவு போட்டு உள்ளார் தமன்னா. அதில், டீன் ஏஜ் கனவுகள் முதல் அந்த கனவு நனவானது வரை… துன்பத்தில் இருக்கக்கூடிய ஒரு பெண், பக்கத்து வீட்டைச் சார்ந்த பெண், ஒரு பயமற்ற புலனாய்வு பெண், மோசமான பவுன்சர் என பலதரப்பட்ட கேரக்டர்கள் மூலம் அற்புதமான பயணம் செய்து வந்திருக்கிறேன். 18 ஆண்டுகளாக என்னுடைய முதல் காதலை தற்போது நிறைவு செய்துள்ளேன். குறிப்பாக, ஆக்ரி சாச் என்ற ஒரு வெப் தொடரில் அனன்யா என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன். இது மிகவும் சவாலான கேரக்டர். ஒவ்வொரு உணர்ச்சிகளையும் இந்த கேரக்டரில் செலுத்தி என்னுடைய முழுமையான உழைப்பை கொடுத்துள்ளேன். எனது முயற்சியை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட எனது அற்புதமான 18 ஆண்டு நினைவுகளை நினைவு கூற ஒரு சிறிய நேரம் கிடைத்தது. என்னுடைய இந்த கனவு சவாரியில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார் தமன்னா. அதோடு தனது 18 ஆண்டுகால சினிமா பயணம் குறித்து ஒரு வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.