ஹானர் நிறுவனத்தின் இரண்டாவது Fold வகை தயாரிப்பான Honor Magic V2 மற்றும் Honor Magic V2 Ultimate சீனாவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று உலக அளவிலும் வெளியிடப்பட்டுள்ளது. Snapdragon 8 Gen 2 ப்ராசஸர், 7.92 இன்ச் டிஸ்பிளே, 1TB மெம்மரி, 66W சூப்பர் சார்ஜிங் வசதி ஆகியவை இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைலின் ஸ்பெக்ஸ் குறித்த விவரங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
அதிநவீன ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Honor Magic V2 மாடல் Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர் மற்றும் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. Honor Magic V2 மாடலில் 16GB ரேம் +256GB ஸ்டோரேஜ் ,16GB ரேம் +512GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் இடம்பெற்றுள்ளது. Honor Magic V2 Ultimate மாடலில் 16GB ரேம் +1TB ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளது.Honor Magic V2 டிஸ்பிளேHonor Magic V2 – ல் 7.92 இன்ச் உட்புற மெயின் foldable OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , வெளிப்புறத்தில் 6.43 இன்ச் foldable OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இன்னர் ஸ்க்ரீன் 2344×2156 பிக்ஸல்ஸ் மற்றும் எக்ஸ்டர்னல் ஸ்க்ரீன் 2376×1060 பிக்ஸல்ஸ் வசதியில் வெளியிடப்பட்டுள்ளது.
கேமராHonor Magic V2 – ல் OIS வசதியோடு கூடிய 50 மெகாபிக்ஸல் வைட் கேமரா, 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 20 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ கேமரா ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன. 4K சப்போர்ட்டோடு கூடிய 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் நிறங்கள்Honor Magic V2 மொபைலில் 5000 mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 66W சூப்பர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள நிறங்களை பொறுத்தவரை Honor Magic V2 பர்ப்பில், ப்ளாக்(PU), கோல்டு மற்றும் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது. Honor Magic V2 Ultimate ப்ளாக்(PU) நிறத்தில் மட்டும் வெளியாகியுள்ளது.
Honor Magic V2 பர்ஸ்Honor Magic V2 மொபைலோடு வெளியிடப்பட்டுள்ள பர்ஸ் வடிவிலான Honor Magic V2 Purse வசதி மூலம் உங்கள் போனை சுலபமாக மற்றும் பாதுகாப்பாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இது கிட்டத்தட்ட மினி ஹேண்ட்பேக் போலவே இருக்கும்.
Honor Magic V2-ன் விலைhonor magic v2 குளோபல் வெளியீட்டை தொடர்ந்து அதன் விலை எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், கடந்த ஜூலை மாதம் நடந்த வெளியீட்டின்படி, இதன் 16GB RAM + 256GB வேரியண்ட் இந்திய மதிப்பில் 1,03,000 ரூபாய் விலைக்கும், 16GB + 512GB வேரியண்ட் 1,14,500 ரூபாய் விலைக்கும், 16GB + 1TB வேரியண்ட் 1,37,400 ரூபாய் விலைக்கும் வெளியாகியது.