ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் முதல் படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் வரை அனைவரையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது. ரஜினியை ரசிகர்கள் எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என விரும்பினார்களோ, கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களில் என்னென்ன விஷயங்கள் மிஸ்ஸானதோ அதெல்லாம் ஜெயிலர் படத்தில் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை திரையில் பார்த்ததாக ரசிகர்கள் நெல்சனை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.
கலாநிதிமாறனின் கோரிக்கை
இதையடுத்து தலைவர் 171 படத்திற்காக லோகேஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் தலைவர். லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் ரஜினியின் தலைவர் 171 படத்தை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இதுவே ரஜினியின் கடைசி படம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினியிடம் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஒரு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.
RS Shivaji passed away: நான் உயிர் வாழ முக்கிய காரணமாக இருந்தவர் கமல்..உருக்கமாக பேசிய ஆர்.எஸ் சிவாஜி..!
என்னவென்றால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கவேண்டும் என்பது தான் அந்த கோரிக்கையாம் .ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கலாநிதிமாறன் நடிகர் ரஜினிக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் காசோலையும் பரிசாக கொடுத்தார் கலாநிதிமாறன்.
ஜெயிலர் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 250 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் கலாநிதி மாறன் இருக்கின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் தானாம். எனவே தான் கலாநிதிமாறன் ரஜினிக்கும், நெல்சனுக்கும் பரிசுகளை வாரி வழங்கியுள்ளார்.
நிறைவேற்றுவாரா ரஜினி ?
இந்நிலையில் நேற்று ரஜினியின் இல்லத்திற்கே சென்று காரையும், காசோலையும் பரிசாக கொடுத்தார் கலாநிதிமாறன். அப்போது தான் தன் தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் பண்ணவேண்டும் என ரஜினியிடம் கலாநிதிமாறன் கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. இதற்கு ரஜினியும் ஓகே சொல்வார் என்று தான் தெரிவதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
எனவே இந்த தகவலை அடுத்து ரஜினி மற்றும் லோகேஷ் இணையும் தலைவர் 171 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சிலர் பேசி வருகின்றனர். ஆனால் கலாநிதிமாறன் உண்மையிலேயே இந்த கோரிக்கையை ரஜினியிடம் வைத்தாரா ? இல்லை இதெல்லாம் வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.