சென்னை: தமிழ்நாட்டில் நெல்லுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை செப்டம்பர் 1முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், விவசாயிகள் அல்லாத பிற ஆதாரங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டால், நேரடி கொள்முதல் மையத்தின் கொள்முதல் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்டா மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிற மாவட்டங்களில் நெல் கொள்முதலின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 2023-2024 காரீப் சந்தைப் பருவம் வெள்ளிக்கிழமை […]