சுதீப்சுதீப் சஞ்சய் தான் இவரின் முழு பெயர். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர், கதையாசிரியர் என பன்முக திறமை கொண்டவர். இவர் கன்னட படங்களில் பிரதானமாக நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துவருகிறார். படங்களில் ஹீரோவாக நடித்துவரும் இவருக்கு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரமே கிடைக்கும். இவர் படங்களில் தான் வில்லன் தவிர நிஜ வாழ்வில் தங்கமானவர் என பலரும் புகழாரம் சூட்டுவர்.
சுதீப் டு கிச்சா சுதீப்இவரின் இயற்பெயர் சுதீப். 2001இல் இயக்குனர் ஓம் பிரகாஷ் ராவ் இயக்கிய ஹுச்சா படத்தில் சுதீப் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தில் சுதீபின் பெயர் கிச்சா. கிச்சா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, மக்கள் மனதில் கிச்சாவாகவே இடம்பிடித்தார். அதன் பின்னர் வெறும் சுதீப், கிச்சா சுதீப் ஆனார்.
தமிழில் இவர் நடித்த படங்கள்2012இல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ படத்தில், பயங்கர வில்லனாக சுதீப் நடித்திருப்பார். சமந்தாவின் காதலனான நாணியை கொள்ளும் பயங்கர வில்லன். அதன்பின்னர், 2015இல் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி படத்தில் நடித்தார் சுதீப். அதே ஆண்டு, தளபதி விஜயுடன் இணைந்து புலி படத்தில் நடித்தார் சுதீப். பெரும்பாலும், கன்னட படங்களில் நடிக்கும் சுதீப், அவரின் சமூக சேவையால் இந்தியா முழுவதும் ஃபேமஸ்.
தங்கமான சுதீப்சுதீப் நடிப்பது மட்டுமல்லாமல் பல பேருக்கு சேவையும் செய்துவருகிறார். இவரின் கிச்சா சுதீப்பா சேரிட்டபிள் தொண்டு நிறுவனம் மூலமாக, தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு படிப்பதற்கான உதவி செய்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில், பல பேருக்கு பல வகையில் உதவி செய்திருக்கிறார். படிக்க முடியாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு தேவையான சீருடை, புத்தகம் என வாங்கிக்கொடுத்து அவர்களை படிக்க வைக்கிறார். அதுமட்டுமில்லாமல், கிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களை தத்தெடுத்து பராமரிக்கும் சேவையையும் செய்கிறார். அவரின் சேவைகள் இன்னும் பல உண்டு.
பிறந்தநாள் வாழ்த்துஎன்னதான், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், நிஜவாழ்வில் இவர் ஹீரோ என்றே ரசிகர்கள் இவரை சொல்லுவார்கள். பல பேருக்கு பல வகையில் செய்து வரும் இந்த நடிகருக்கு இன்று 52வது பிறந்ததினம். பிறந்து இந்த உலகத்தில் அரை நூற்றாண்டை கடந்துவிட்டார் இந்த கன்னட நடிகர் சுதீப்.