சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து மிக அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளுக்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து மிக அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஜூலை மாதத்தைவிட 3.6 லட்சம் கூடுதல் ஆகும். கடந்த ஆக.11-ம் தேதி 3.29 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.