இந்தோனேஷியாவில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு: பிரதமர் பங்கேற்பு| PM Modi to attend ASEAN, East Asia Summit meetings in Indonesia next week

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தோனேஷியாவில் செப்.,6 மற்றும் 7 ல் நடக்கும் ஆசியான் மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்தோனேஷிய அதிபர் ஜோகா விடோடோவின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்க மோடி ஜகார்த்தா செல்ல உள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு ஆசிய மாநாடானது, ஆசியான் அமைப்பு தலைவர்கள் மற்றும் இந்தியா உள்ளிட்ட கூட்டாளிகள் இடையே பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தும் எனக்கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு அப்போதும் இந்தோனேஷிய அதிபராக இருந்த விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.