அட்ஜெஸ்மென்ட் குறித்து மனம் திறக்கும் ‛கேபிஒய்' சசிகலா

சின்னத்திரை, சினிமா என அனைத்திலும் பிரபலமான லேடி காமெடியனாக வலம் வர தொடங்கியுள்ள அறந்தாங்கி நிஷா, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார். அதில், பழைய ஜோக்குகளையே வேற மாதிரி சொல்லி கைத்தட்டல்களை பெற்ற நிஷாவை அப்போதே பலரும் மொக்கை ப்ளேடு என கிண்டல் செய்து வந்தனர். அதே சீசனில் அறிமுகமான சசிகலா கொஞ்சம் புதிதாக ஜோக்குகளை சொல்லி ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும், சசிகலா திடீரென நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் பட்டிமன்ற பேச்சாளராகவும், சில மேடைகளில் நடுவராகவும் சசிகலா மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'அறந்தாங்கி நிஷா பழைய ஜோக்குகளை தான் சொல்வார். நானும் பழனியும் புது ஜோக்குளை சொல்லி ரசிகர்கள் பாராட்டுகளை பெற்ற போதிலும் எங்களை நிகழ்ச்சியிலிருந்து திடீரென நீக்கிவிட்டனர். எங்களை ஏன் நீக்கினார்கள் என்ற காரணத்தை இப்போது வரை சொல்லவில்லை' என்று கூறியுள்ளார்.

மேலும், 'சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிலர் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொல்லி கேட்டனர். அதுபோன்று கேட்பவர்களிடம் படுத்து தான் உன் படத்துல நடிக்கனுமா?' என்று தைரியமாக பதிலடி கொடுத்து பல படங்களை நிராகரித்துவிட்டதாக சசிகலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.