ஒடிசா ரயில் விபத்து: 3 அதிகாரிகள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை| Odisha train accident: CBI, charge sheet against 3 officials

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள 3 ரயில்வே அதிகாரிகள் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஒடிசாவின், பாலாசோர் மாவட்டத்தில், ஜூன் 2ம் தேதி கோல்கட்டா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட பயங்கர விபத்தில், 293 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரயில் விபத்துக்கு சிக்னல் அமைக்கப்பட்டதில் நேர்ந்த தவறே காரணம் என, ரயில்வே அமைச்சகம் ஒப்புக் கொண்டது.

விபத்து தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அருண்குமார் மகந்தா, அமீர்காந்த், பப்பு குமார் ஆகிய மூன்று ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
புவேனஸ்வர் நகர சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் மூன்று அதிகாரிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையை இன்று (02 ம் தேதி) தாக்கல் செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.