Thalaivar 171 : அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலில் இணைகிறாரா லோக்கி ?? எவ்வளவு கோடி தெரியுமா ?

2017இல் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமானார். எடுத்த முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்காக, சிறந்த அறிமுக இயக்குனர் ஏன்னும் விருதை விஜய் அவார்ட்ஸ் இவருக்கு வழங்கியது. 2019இல் நடிகர் கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி படம் வெளியானது. இந்த படமும் தரமான சம்பவத்தை வசூல் மூலமாகவும் விமர்சனம் மூலமாகவும் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்னும் சீக்குவல் இந்த படத்திலிருந்துதான் தொடங்கியது.

சம்பளத்தை உயர்த்தும் லோக்கி

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

தளபதி விஜய் நடிப்பில் 2021ல் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பு, இந்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாகவே மாஸ்டர் படம் அமைந்திருந்தது. அடுத்ததாக, உலகநாயகனுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்தார். இவர்கள் காம்போவில் உருவான விக்ரம் படமும் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்த படம் மல்டி ஸ்டாரர் படமாகவே அமைந்தது. நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் என தரமான படமாக விக்ரம் அமைந்தது. இந்த படம் கமல்ஹாசனுக்கு ஒரு கம் பேக்காகவே இருந்தது.

விக்ரம் காம்போ

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 2

பல படங்களுக்கான கதைகளை கையில் வைத்திருக்கிறார் லோக்கி. தற்போது, விஜய், த்ரிஷா நடிப்பில் லியோ படம் முடிந்துள்ளது. இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19 வெளியாக உள்ளது.

அடுத்தடுத்து வரும் படங்கள் ! சூர்யாவின் லைன் அப்ஸ் .. இதோ

நடிகர் சூர்யாவுடன் இரும்பு கை மாயாவி என்னும் சூப்பர் ஹீரோ படத்தில் இணையப்போவதாக லோக்கி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கைதி 2, விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் தனி கதை என ஏற்கனவே ப்ராஜெக்ட்டுகளை வைத்திருக்கும் லோக்கி சூப்பர்ஸ்டாரின் 171வது படத்தை இயக்கப்போவதாக தெரிகிறது. தற்போது, சூப்பர்ஸ்டார் அவரது 170வது படத்திற்காக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேலுடன் இனைந்திருக்கிறார். இந்த படத்தின் பூஜை வேலைகளும் சமீபத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டாருடன் லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில், அவர் இயக்கிய 5 படங்களுமே பிலாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அவரின் சம்பளத்தை தலைவர் 171வது படத்தில் உயர்த்தப்போகிறாராம் லோக்கி. முன்னதாக, இயக்குனர் அட்லீ தனது ஜவான் படத்திற்காக ரூபாய் 50 கோடி சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் என்னும் பெயரைப் பெற்றார். ஆனால், லோக்கியின் சம்பள உயர்வு இந்த பெயரை உடைத்துள்ளது. தலைவர் 171க்காக ரூபாய் 60 கோடி சம்பளம் வாங்கப்போகிறாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதன் மூலம், அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் என்னும் பட்டத்தை மட்டுமல்லாமல், அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலிலும் இணைவாராம் லோக்கி.

ஜவான் படத்தை ரிஜெக்ட் செய்தாரா சமந்தா ?? காரணம் இதோ !

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.