பியூனஸ்ஏர்ஸ்: பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்து கொண்டதில் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜென்டினா நாட்டு நடிகை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நடந்துள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் பிரபலமான நடிகையாகவும், டி.வி. ஷோக்களில் பங்கேற்றும் வந்தவர் சில்வைனா லுனா,42, கடந்த 2011ம் ஆண்டு தன் பின் அழகை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்து கொண்டார். நாளடைவில் ஏற்பட்ட பல்வேறு பக்கவிளைவுகள் காரணமாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்உறுப்புகள் பாதிக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement