இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம்தான் ஜவான். இந்த படத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோ ஷாருக்கான் டூயல் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக நயன்தாரா மற்றும் அனிருத் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
ஜவான்
இந்த படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார். படக்குழுவினர் பலரும் கலந்துக்கொண்ட இந்த நிகழ்வில் படத்தின் ஹீரோயின் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் குறித்து மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடித்த பிகில் படத்தின் ப்ரோமோஷன் நேரத்திலேயே ஜவான் படம் குறித்த பேச்சுவார்த்தை எழுந்தது. ஜவான் படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்த இயக்குனர் அட்லீ முதலில், படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவை தான் கேட்டிருக்கிறார்.
குஷி நாயகி சமந்தா
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2019இல் ஜவான் படத்தில் நடிக்க சமந்தாவை கேட்டிருக்கிறார் அட்லீ. ஆனால், சமந்தா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்திருக்கிறார். முன்னதாக, இயக்குனர் அட்லீ மற்றும் சமந்தா இணைந்து இரண்டு படத்தில் வேலை பார்த்திருக்கிறார்கள். தளபதி விஜயின் தெறி மற்றும் மெர்சல் படத்திலேயே சமந்தா மற்றும் அட்லீயின் காம்போ உருவானது. அந்த நிலையில், ஜவான் படத்தின் வாய்ப்பை சொல்ல, சமந்தா அதை நிராகரித்திருக்கிறார்.
சமந்தா தனது திருமண வாழ்கையை 2017இல் தொடங்கினார். அட்லீ ஜவான் படத்தை பற்றி சொல்லும்போது, சமந்தா தனது முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து தனது குடும்ப வாழ்க்கையை கவனிக்கவேண்டும் என இந்த ஜவான் பட வாய்ப்பை ரிஜெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுதான் உண்மையான காரணமா என அறியப்படவில்லை.
நயன்தாரா மற்றும் சமந்தா
ஆனால், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா வட்டாரங்களிலும் சினிமா ரசிகர்கள் வட்டாரங்களிலும் ஜவான் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படி ஒரு பெரிய மற்றும் மிகச் சிறந்த வாய்ப்பை இழந்திருந்தாலும், இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. நேற்று வெளியான குஷி திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமரிசனங்களே வருகிறது. மேலும், ஜவான் திரைப்படம், வரும் செப்டம்பர் 7 திரையரங்குகளில் வெளியாகிறது.
Guest Author : Radhika Nedunchezhian