இரண்டரை கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பஹத் பாசில்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார் பஹத் பாசில். அவர் நடித்த மலையாள படங்கள் கூட ஒன்றிரண்டு தோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் அவர் நடித்த பிறமொழி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை வில்லனாக நடித்து வந்தாலும் வாங்கி வருகிறார் பஹத்.
பஹத்தும் சரி, அவரது மனைவியும் நடிகையுமான நஸ்ரியாவும் சரி சொகுசு கார் பிரியர்கள். மார்கெட்டிற்கு எந்த கார் வந்தாலும் உடனே வாங்கி விடுவார்கள். அந்த வரிசையில் தற்போது அறிமுகமாகி உள்ள 'லேண்ட் ரோவர் டிபென்டர் 90 வி8' என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் மூலம் கேரளாவில் இந்தக் காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை பஹத் பாசில் பெற்றுள்ளார். இந்த காரின் விலை இரண்டு கோடியே 44 லட்சம் ரூபாய்.