ஜெயிலர் படம் நடத்திய வசூல் வேட்டையால் ஷாருக்கான், பிரபாஸை முந்தி அதிக சம்பளம் வாங்கும் நடிகராகியுள்ளார் ரஜினி.
ஜெயிலர்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டிய ஜெயிலர் படம் ரிலீஸாகி 23 நாட்களில் உலக அளவில் ரூ. 620 கோடி வசூல் செய்துள்ளது. அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றியால் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த்.ஜேசன் சஞ்சய்தனி ஒருவன் 2 வில்லன் இவரா?ரஜினி சம்பளம்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்த ஜெயிலர் படம் பிளாக்பஸ்டராகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 320 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்தே லாபத்தில் இருந்து ரூ. 100 கோடியை ரஜினியிடம் கொடுத்தது சன் பிக்சர்ஸ். ஜெயிலருக்காக ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 110 கோடி. ஆக ஜெயிலருக்காக ரஜினிக்கு ரூ. 210 கோடி கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
நம்பர் ஒன்ஜெயிலரால் ரஜினிக்கு எத்தனை நூறு கோடி கிடைச்சிருக்கு தெரியுமா?ரூ. 210 கோடியோடு நின்றுவிடவில்லை. ரூ. 1.51 கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 7 காரை ரஜினிக்கு பரிசளித்துள்ளார் கலாநிதிமாறன். இந்த ரூ. 210 கோடி மூலம் ஷாருக்கான், பிரபாஸை சம்பள விஷயத்தில் முந்திவிட்டார் ரஜினி. தற்போது இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் ஓடிடிதியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்திய ஜெயிலர் படம் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. அதே நாளில் தான் அட்லி இயக்கியிருக்கும் ஜவான் படம் தியேட்டர்களுக்கு வருகிறது. ஜெயிலர் படத்தால் தான் வசூல் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் வெற்றி பெற்றதற்கு ரஜினியின் பவர் தான் காரணம் என்கிறார் நெல்சன் திலீப்குமார்.
ஷாருக்கானின் ஜவானுடன் மோதும் ரஜினியின் ஜெயிலர்: இதை சத்தியமா எதிர்பார்க்கல
தலைவர் 170ஜெயிலரை அடுத்து தலைவர் 170 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலரை அடுத்து தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். அதனால் தலைவருக்காக ஸ்பெஷலாக இசையமைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாமியர்கத்ரீனா கைஃபை முந்திய நயன்தாரா: இன்ஸ்டாகிராமில் புது சாதனைஜெயிலர் பட வெற்றியால் அனைவர் கவனமும் ஞானவேல் பக்கம் திரும்பியிருக்கிறது. ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகவிருக்கிறது. மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்தை அடுத்து தலைவர் 170 படத்திலும் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. ஜெய்பீம் போன்றே தலைவர் 170 படமும் அனைவரையும் கவரும் என்று நம்பப்படுகிறது.
தொடரும் நடிப்புதலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ரஜினி என முன்பு தகவல் வெளியானது. ஆனால் நடிப்புக்கு முழுக்கு போட ரஜினி முடிவு செய்யவில்லை. ஞானவேல் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். அதன் பிறகும் படங்களில் நடிப்பார். தலைவர் 171 படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.