ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், சார்லி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இறைவன்.
தனி ஒருவன் 2 வில்லன் இவரா?
ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இறைவனில் கொடூர சீரியல் கில்லராக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். சிறுமிகளை கடத்தி கொடூரமாக கொலை செய்து அவர்களின் ரத்தத்தில் ஸ்மைலி வரையும் கொலைகாரராக மிரட்டியிருக்கிறார் ராகுல் போஸ்.
சிறுமிகள் என்றும் கூட பார்க்காமல் அவர்களை கொலை செய்யும் ராகுல் போஸை பிடிக்கும் வேலையில் இறங்குகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் தான் இறைவன் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
சீரியல் கில்லராகவே மாறியிருக்கிறார் ராகுல் போஸ். கொடூர குற்றங்களை செய்பவர்களை சுட்டுக் கொன்றுவிடுகிறார் ஜெயம் ரவி. ஆனால் ராகுல் போஸை பிடிக்க முடியாமல் அல்லாடுகிறார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
ஜெயம் ரவியை இப்படி பார்க்கும்போது தனி ஒருவன் படம் தான் நினைவுக்கு வருகிறது. ஜெயம் ரவியின் காதலியாக வந்திருக்கிறார் நயன்தாரா.
இறைவன் ட்ரெய்லரே படு சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனால் படம் கண்டிப்பாக நன்றாகத் தான் இருக்கும் என நம்பப்படுகிறது. தொடர் கொலைகளை பார்க்கும்போது ராட்சசன் நினைவும் வராமல் இல்லை. ஆனால் இந்த இறைவன் படம் தனித்து தெரிகிறது.
இறைவன் ட்ரெய்லரை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,
வேற லெவல் ட்ரெய்லர். இறைவனுக்கு ஒரு ஹிட் பார்சல். தீயாக இருக்கிறது. அடங்கமறு வைப் வருகிறது. ட்ரெய்லர் மாஸாக இருக்கிறது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
1, 2, 3, 1,2,3னு மண்டக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. படத்தை பார்க்க வெயிட்டிங். வில்லன் வெறித்தனமாக இருக்கிறார்.
ஜெயம் ரவி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து போலீஸ் கதையில் நடிக்க வேண்டாம் அண்ணா என தெரிவித்துள்ளனர்.
இறைவன் படம் செப்டம்பர் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜவான் படத்தின் இடையே இறைவன் ட்ரெய்லரை தியேட்டர்களில் காட்டவிருக்கிறார்கள்.
வித்தியாசமாக படம் எடுப்பதற்கு பெயர் போனவர் அகமது. இறைவன் படத்தை ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நினைத்தபடி முடியவில்லை. இதையடுத்தே இறைவன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள்.
இறைவன் படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகவிருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் படம் இறைவன். பொன்னியின் செல்வன் 2 பட வெற்றியால் இறைவன் மீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது.
கத்ரீனா கைஃபை முந்திய நயன்தாரா: இன்ஸ்டாகிராமில் புது சாதனை
இறைவன் ரிலீஸுக்கு முன்பே நயன்தாரா நடிப்பில் ஜவான் படம் வருகிறது. செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் ஜவான் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் நயன்தாரா.