இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
2023 செப்டம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 செப்டம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு (40-45) கி.மீ வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இன்று மதியம் 12:10 மணிக்கு பங்கதெனிய (புத்தளம் மாவட்டம்), வாரியபொல (குருணாகல் மாவட்டம்), மடவளை (மாத்தளை மாவட்டம்), கொக்கட்டிச்சோலை (மட்டக்களப்பு மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.