மூணாறு: கேரளாவில் செப்.5 வரை பலத்த மழை பெய்யும் என்பதால் பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘எல்லோ அலர்ட்’ விடுத்தது.
கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்தாண்டு கடந்த மூன்று மாதங்களாக பருவ மழை குறைவாக பதிவான நிலையில் மழை முடிவுக்கு வரும் தருவாயில் தற்போது மழை பெய்து வருகிறது.
இடுக்கி மாவட்டத்தில் நேற்று பலத்த மழைக்கான ‘எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில் இன்று (செப்.3) திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு ‘எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் நாளை (செப்.4) இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கும், செப் 5ல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கும் எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பருவ மழை முடிவுக்கு வரும் செப்டம்பரில் முதல் வாரத்தில் மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வடமேற்கு வங்க கடலில் இன்று புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement