விஜய் தற்போது தளபதி 68 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லாஸ் அஞ்செல்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு விஜய்யின் கதாபாத்திரத்திற்கான 3D VFX ஸ்கேன் நடைபெற்று வருகின்றதாம். இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் பயன்படுத்திய டெக்னீக்கை தளபதி 68 படத்திற்காக விஜய் பயன்படுத்தி வருகின்றார்.
எனவே தளபதி 68 திரைப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இத்தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்நிலையில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு உட்பட தயாரிப்பாளரும் லால் அஞ்செல்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெங்கட் பிரபு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ட்ரெண்டாகும் தளபதி 68
குறிப்பாக விஜய் திரையரங்கில் படம் பார்ப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் வெங்கட் பிரபு. அது இந்தியளவில் ட்ரெண்டானது. கடந்த இரண்டு நாட்களாக ஏதேனும் ஒரு புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டு வந்தார். இதையடுத்து இன்றும் வெங்கட் பிரபு ஒரு புகைப்படத்தை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வெங்கட் பிரபு இன்று சண்டே, விடுமுறை என ட்வீட் போட்டுவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று தளபதியின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாது என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.
ரசிகர்களுக்காக நடுரோட்டில் சிலம்பம் சுற்றிய விஜய்..செம மாஸான வீடியோ உள்ளே..!
ஆனால் இன்று தான் விடுமுறை, அப்போ நாளைக்கு விஜய்யின் புகைப்படத்தை வெங்கட் பிரபு கண்டிப்பாக வெளியிடுவார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் ரசிகர்களின் கவனத்தை தளபதி 68 பக்கம் திரும்பியுள்ளார் வெங்கட் பிரபு.
லோகேஷ் கனகராஜின் லியோ படத்தை பற்றியே தான் ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால் தற்போது வெங்கட் பிரபு தன் ஸ்டைலில் பதிவுகளை போட்டு லியோவை விட தளபதி 68 படத்தை பற்றி ரசிகர்கள் அதிகம் பேசும்படி செய்துள்ளார். தன் வழக்கமான வித்யாசமான ஸ்டைலில் தளபதி 68 படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றார் வெங்கட் பிரபு.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர், அப்டேட் பொறுத்தவரை லோகேஷ் கனகராஜின் லியோவை வெங்கட் பிரபுவின் தளபதி 68 ஓவர்டேக் செய்து வருவதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தளபதி 68 பற்றி பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதாவது தளபதி 68 மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருவதாகவும், இப்படத்தில் சிம்பு, ஜெய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாக இருந்த ஜோதிகா விலகியதாகவும், அவருக்கு பதில் சினேகா விஜய்யுடன் இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதெல்லாம் உண்மையா இல்லை வதந்தியா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு பிறகு தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.