வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம்(02) சிறப்புற இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் Dr.ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டத்தில் காலை 9.30மணிக்கு இடம்பெற்றது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரின் பங்கேற்புடன் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, தென்னை செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னைங் கன்றுகளும், உள்ளீடுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் :
இரண்டு வருடங்களில் 3.5 மில்லியன் தென்னைகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தரர். இதன் மூலம் வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் தென்னை செய்கையில் சிறப்பாக மேற்கொண்ட செய்கையாளர்களிற்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் சிறந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் காசோலைகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இன்றைய நாளின் நினைவாக அமைச்சரின் கரங்களால் தென்னங்கன்றும் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.