சிலியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மினி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில், ஏழு பேர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான சிலியில், சான் பெட்ரோ டே லா பாஸ் என்ற இடத்தில், நேற்று மினி பஸ் ஒன்று அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ரயில், மினி பஸ் மீது மோதி இழுத்துச் சென்றது. இந்த விபத்தில், மினி பஸ்சில் இருந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட எட்டு பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் அளித் துள்ள விளக்கத்தில், ‘சம்பவ இடத்தில் தடுப்புகள் இருந்தும், அவற்றை மதிக்காமல் டிரைவர் மினி பஸ்சை இயக்கி தண்டவாளத்தை கடந்து சென்றதே விபத்திற்கு காரணம்.
இதை, அங்குள்ள கண் காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து உறுதி செய்துள்ளோம்’ என குறிப்பிடப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement