மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி!
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் அவரது காதலியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி. அதன் பிறகு அஜித் நடித்த வலிமை படத்தில் நடித்த அவர், மீண்டும் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக அஜித்குமார் தனது படங்களில் வித்யா பாலன், ஹுமா குரோஷி, மஞ்சு வாரியர் போன்ற 40 வயது நடிகைகளுக்கே சான்ஸ் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் விடாமுயற்சி படத்தில் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் த்ரிஷா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது வலிமை படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஹுமா குரோஷியே விடாமுயற்சி படத்திலும் அஜித்துடன் நடிக்கப்போவதாகவும், அவரிடத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.