லோகேஷ் கனகராஜ் இன்று இந்திய திரையுலகிலேயே மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத ஒருவர். வங்கியில் பணிபுரிந்து வந்த லோகேஷ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இரங்கி போராடி வந்தார்.
அந்த போராட்டத்திற்கான பலனை தான் லோகேஷ் தற்போது அனுபவித்து வருகின்றார். இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ள லோகேஷ் தன் நண்பர்களின் நலனுக்காக ஒரு விஷயத்தை துவங்கியுள்ளார். அதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நண்பர்களுக்காக தயாரிப்பு நிறுவனம்
மாநகரம் முதல் விக்ரம் வரை தான் இயக்கிய அனைத்து படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்துள்ளார் லோகேஷ். குறிப்பாக உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார் லோகேஷ். இதன் பின்னர் தான் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் அறியப்படும் இயக்குனராக மாறினார்.
ரசிகர்களுக்காக நடுரோட்டில் சிலம்பம் சுற்றிய விஜய்..செம மாஸான வீடியோ உள்ளே..!
தற்போது இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் அடுத்ததாக தலைவர் 171 திரைப்படம், கார்த்தியின் கைதி 2, சூர்யாவுடன் ஒரு படம் என செம பிசியாக இருக்கின்றார்.
இவ்வாறு பிசியாக இருக்கும் லோகேஷ் தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கவுள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படத்தை லோகேஷின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார் தான் இயக்கவுள்ளார். மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் லோகேஷுடன் இணைந்து பணியாற்றியவர் தான் ரத்னகுமார்.
இவர் இதுவரை மேயாத மான் உட்பட மூன்று படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சந்தனத்தை வைத்து குலுகுலு என்ற படத்தை இயக்கினார். அப்படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் தன் நண்பருக்காக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி கதை மற்றும் திரைக்கதை எழுதி அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளார் லோகேஷ்.
லோகேஷிற்கு குவியும் பாராட்டு
அதன் காரணமாகவே தான் தயாரிக்கும் முதல் படத்தை ரத்னகுமாருக்கு கொடுத்துள்ளார். தயாரிப்பது மட்டுமல்லாமல் அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை லோகேஷ் கனகராஜே எழுதியுள்ளார். இப்படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கின்றார்.
இப்படத்தின் மூலம் ரத்னகுமார் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம்பெற வேண்டும் என்பதே லோகேஷின் விருப்பமாம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இவ்வாறு தொடர்ந்து தன் நண்பர்களுக்காக லோகேஷ் படங்களை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் லோகேஷை மனதார பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.