'இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? உண்டியல்ல இருந்து கைய எடுங்க' உதயநிதியை வச்சு செய்த கஸ்தூரி!

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சனாதன எதிர்ப்பு மாநாடு என்றில்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என தலைப்பு வைத்ததை பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது, ஒழித்தே ஆக வேண்டும் என்ற அவர், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் எதிர்க்கக்கூடாது, ஒழித்துதான் ஆக வேண்டும் என்றார்.

அதுபோலத்தான் இந்த சனாதனமும் என்ற உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய முதல் வேலை என்றார். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Kasturi Complains: ஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் பேமெண்ட் வரல

இந்நிலையில் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி உதயநிதியை சரமாரியாக விளாசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே என்று குறிப்பிட்டுள்ள கஸ்தூரி அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊருக்கு உபதேசம் அதுவே பரம்பரை யுக்தி என்றும் சாடியுள்ள கஸ்தூரி, சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? என்றும் விளாசியிருக்கும் கஸ்தூரி முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பதிவுக்கு வழக்கம் போல் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. நடிகை கஸ்தூரி தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.